ஸ்ரீ குருப்யோ நம

ஸ்ரீ குருப்யோ நம:

மஹா பெரியவா சரணம்

வேதோகிலோ தர்மமூலம் உலகில் உதிக்கும் அனைத்து உயிர்களும் தர்மத்தின் பயனை பெறுவதற்காக பிறக்கின்றன. தர்மத்தின் ஆதாரமாக வேதம் இருக்கின்றது. வேத மந்திரங்கள் ஆகாயத்தில் சப்த ரூபமாக(ஒலிகளாக) இருந்த்தாக கூறப்படுகின்றது. ஒலி வடிவமாக இருந்த வேத மந்திரங்களை ஞான திருஷ்டி கொண்ட ரிஷிகள், சஞ்சரித்துக் கொண்டிருந்த வேத மந்திரங்களை நான்கு வேதங்களாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளாகவும்[பிரிவுகளாகவும்] இருந்த வேத மந்திரங்களை சாமான்ய மனிதர்கள் பயன்பெறும் வகையில் பிரித்து கொடுத்தார்கள். இரண்டு கால் பிராணிகள், நான்கு கால் பிராணிகளின் தேவைகள் அனைத்தும் பஞ்சபூதங்களின் துணையுடன் நடைபோடுகின்றது. பஞ்சபூதங்களிடம் இருந்து மனிதனால், புதுது புதிதாய் காலத்திற்கு ஏற்றார் போல் புது புது பொருட்கள் தயாரிக்கப்படுகின்றது. அனைத்து உயிர்களும் கடவுளினால் படைக்கப்படுகின்றது. ஆற்றல், காத்தல், அழித்தல் இம்மூன்றும் கொண்ட மனிதர்கள் பிறப்பின் பயனை அடைவதின் பொருட்டு ரிஷிகள், மஹான்கள், அவதார புருஷர்கள், சாதுக்கள், நமது முன்னோர்கள் அனைவரும் ஆற்றல், காத்தல், அழித்தல் இம்மூன்றிலும் தன்னிலை மறந்து பிறப்பின் பயனை அறிந்து தன்னைச் சார்ந்தவர்களுக்கு துணையாக ஞான மார்க்கத்தில் பயணித்தார்கள்.

நாட்டிற்கும், வீட்டிற்கும் எதிர்பாராத விதமாக தீமைகளை செய்ய நேர்ந்தால் அது போன்ற எண்ணங்களை போக்கும் விதமாக வேதமந்திரங்கள், கடவுளின் அவதாரங்களின் பெருமைகளை போற்றும் இதிகாசங்கள், புராணங்கள், ஸ்தோத்திரங்களை நாம் நமது முன்னோர்களின் வாயிலாக பெற்றது நமது பெருமையாகும்.

தனி மனித வழிபாடுகள், குடும்ப வழிபாடுகள், கிராம வழிபாடு, நகர வழிபாடு, மாநில வழிபாடு, தேச வழிபாடு என அனைத்தையும் நமது முன்னோர்கள் நமக்கு வழங்கியது ஹிந்து மக்களான நமக்கு பெருமை. மனிதர்களுக்கு தேவையானதை உருவாக்கும் பொருளில் இருந்து ஏற்படும் உபயோகமற்ற கழிவுகளால் தீமைகள் உருவானாலும் அதனை சரிசெய்யும் விதமாக அதற்கு ஒரு தீர்வை உருவாக்குகிறார்கள் மனிதர்கள்.

மனிதர்கள் மூலமாக மனிதர்கள் உருவானாலும் மனிதர்களின் படைப்பானது எங்கும் எதிலும் நிறைந்து இருக்கும். மனிதர்களிடம் காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாத்ஸர்யம் எனும் ஆறு வகை வேறுபாடுகள் குடிகொண்டுள்ளது. ஆறு வேறுபாடுகளும் ஒன்றோடு ஒன்று இணையாமல் துன்பங்களை உருவாக்குகின்றது. மனிதனால் உருவாக்கப்படும் பொருட்களில் இருந்து[WASTAGE] வருகின்ற தோமனிதர்களிடம் இருக்கும் ஆறு வகையான காமக்ரோதாதிஷட்வர்க்கங்கள் பலதுன்பங்களை உருவாக்குகின்றது. துன்பத்தில் இருந்து மனிதன் விடுபட்டு பிறப்பிடமான [பிறவிப்பயனை] எங்கும் நிறைந்திருக்கும் எல்லாம் வல்ல அந்த இறைவனின் பொருட்டு ரிஷிகள் வேதமந்திரங்கள் உள்ளிட்ட மனிதர்களுக்கு நன்மைகளை விளைவிக்கும் பல கோடி மந்திரங்களை ஸனாதனதர்மாக்களான ஹிந்து மத மக்களுக்கு கொடுத்து மகிழ்ந்தார்கள்.

நமது ரிஷிகள் மற்றும் நமது முன்னோர்களும், நமது குருமார்களும் அவர்கள் கண்டறிந்ததை நமக்கு கொடுப்பதினால் அவர்களுக்கு என்ன மகிழ்ச்சி உண்டாகப் போகின்றது. ஒரு தனிமனிதன்தன்னால் உண்டாகும் நல் உணர்வை உழைப்பை தனது சுயநலத்திற்காக பயன்படுத்தாமல் தனது குடும்பத்தார்களுக்காகவும், தனது வாரிசுனர்களுக்காவும், நன்றி மறப்பவர்கள் என்று தெரிந்த பின்னும் அவர்களிடம் வழங்குவதே தர்மத்தின் அடையாளம். நல் உணர்வின் வெளிப்பாடு. கருணையின் வடிவமாக இருக்கின்ற மனிதனுக்கு இந்த உலகம் தனி அந்தஸ்தை வழங்குகின்றது.

ஒரு சிறு விதை செடியாய் வந்தபிறகு மரமாய் வளருகின்றது. மரம் மேலும் பெரிய மரமாய் வளர்ந்து காய்கனிகளை கொடுக்க வளர்ப்பவர் சரியாக வளர்த்தாலும் பஞ்ச பூதங்களின் துணை இல்லாமல் சுவையான காய்கனிகளை தர இயலாது. நாம் பல நற்செயலை புரிந்தாலும் உலகில் அதை எடுத்துச் செல்பவன் பகவான் ஒருவனே. அனைத்து மக்களிடமும் பழகி வாழ்ந்து வந்தாலும் அவர்களிடம் இருந்து பெறப்படும் நன்மை தீமைகள் பாதிப்பு அடையச் செய்யாமல் இருப்பதற்காக வேதமந்திரங்கள் போன்ற மஹாமந்திரங்களை சரியான முறையில் உச்சரிப்பதினாலும், மஹாமந்திரங்களை கேட்பதினாலும், உணர்வுகளும், சிந்தனைகளும், செயல்களும் புத்துணர்வு பெறுகின்றது.

மனிதர்களுக்கு இருக்கும் நல் உணர்வுகள் மேலோங்க வேதஸமிதி 2006ஆம் ஆண்டு ஸ்ம்பூர்ண கிருஷ்ண யஜுர் வேத கன பாராயணம், 2007ஆம் ஆண்டு நவக்ரஹங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு லக்ஷம் எண்ணிக்கையில் ஜபம், ஹோமம், தர்ம உபநயனம், ஸ்ரீராமஜெயம் நாமாக்களை அன்பர்கள் எழுதி பயன் பெறும் வகையில் சுமார் 20,000க்கும் அதிகமான ஸ்ரீராமஜெய புத்தகம், வருடந்தோறும் சதசண்டி மஹாயஞ்யம், பகுதி நேர கன பாராயணம், 2017ஆம் ஆண்டு ஒரு கோடி புவனேஸ்வரி மந்திர ஜெப ஹோமம். 2018 ஆம் ஆண்டு மஹா சிவராத்திரி மஹோத்ஸவம், வருடந்தோறும் 108 சுவாஸினி பூஜை, 108 கன்யா பூஜை, உபன்யாஸங்கள், நாமஸங்கீர்த்தனம், அன்னதானம் போன்ற நற்பணிகளை ஆஸ்திக அன்பர்களின் பேராதரவுடன் நடத்தி வருகின்றது.

மனிதர்களுக்கு இருக்கும் நல் உணர்வுகள் மேலோங்க வேதஸமிதி 2006ஆம் ஆண்டு ஸ்ம்பூர்ண கிருஷ்ண யஜுர் வேத கன பாராயணம், 2007ஆம் ஆண்டு நவக்ரஹங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு லக்ஷம் எண்ணிக்கையில் ஜபம், ஹோமம், தர்ம உபநயனம், ஸ்ரீராமஜெயம் நாமாக்களை அன்பர்கள் எழுதி பயன் பெறும் வகையில் சுமார் 20,000க்கும் அதிகமான ஸ்ரீராமஜெய புத்தகம், வருடந்தோறும் சதசண்டி மஹாயஞ்யம், பகுதி நேர கன பாராயணம், 2017ஆம் ஆண்டு ஒரு கோடி புவனேஸ்வரி மந்திர ஜெப ஹோமம். 2018 ஆம் ஆண்டு மஹா சிவராத்திரி மஹோத்ஸவம், வருடந்தோறும் 108 சுவாஸினி பூஜை, 108 கன்யா பூஜை, உபன்யாஸங்கள், நாமஸங்கீர்த்தனம், அன்னதானம் போன்ற நற்பணிகளை ஆஸ்திக அன்பர்களின் பேராதரவுடன் நடத்தி வருகின்றது.

தர்ம சிந்தனையுடன் தர்மத்தை புரிதல். அதுவே தர்மம். தாயார், தகப்பனார்கள் தன் குழந்தைகளுக்கும், தனது பெற்றோர்களுக்கும் செலவழிக்கும் நேரத்தையும், பொறுப்பு உணர்ச்சியையும், எதன் அடிப்படையில் செய்கிறார்கள், கடமை எனும் பொறுப்பாக நினைத்து செய்கிறார்கள். வேதஸமிதியின் சிந்தனையும் செயலும் பொதுமக்களுக்காக செய்யப்படும் அனைத்தும் அனைவரிடத்திலும் இருக்கும் நற்சிந்தனைகள் மேலோங்க நித்ய வேத பாரயணம், கன பாராயணம், காம்யார்த்த ஹோமங்களை செய்து வரும் நற் கார்யங்கள் அனைத்தும் குரு கடாஷத்தினால் கிடைத்த பாக்யமாகும். வேதஸமிதியின் வாயிலாக நடக்கும் அனைத்தும் குருவின் பாத கமலங்களிலும் எங்கும் நிறைந்து இருக்கும் பகவானின் திருவடிகளில் ஸமர்ப்பிக்கின்றோம்.